சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியோரம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழந்தமிழர்களின் மேம்பட்ட வாழ்வியலுக்கான சான்றுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஏழாம் கட்ட அகழாய்வு, கீழடி, அகரம், கொந்தகை, , மணலூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பல்வேறு பொருள்கள் கிடைத்த நிலையில், தற்போது சதுர வடிவத்தில் வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.