மேற்கு வங்கம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அலை வீசுவதாகவும் தங்கள் கட்சி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 3ஆவது கட்ட தேர்தல் நடக்கும் ஜாய் நகர் பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். மேற்கு வங்கத்தில் தோல்வி உறுதி என உணர்ந்துவிட்ட நிலையில் பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மம்தா துணைக்கு அழைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என மம்தா கடிதம் எழுதியிருந்த நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காவி உடை அணிந்து நெற்றியில் திலகம் இட்டுள்ளவர்களை அரக்கர்கள் போல் திரிணாமூல் தலைவர்கள் கருதுவதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார். வங்கதேசத்தில் உள்ள காளி கோயிலில் தாம் வழிபட்டதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பிய மோடி, அதை திரிணாமூல் கட்சியினர் விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.