அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பதை ஜந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி சாத்தியப்படுத்தியுள்ளார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர், பொதுத்துறை வங்கிகளில் இருந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டதால், தற்போது அவை இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். வங்கிக்கணக்கு என்பது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை என்றும் அது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொழில்கள் அனைத்தும் வளரும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.