லீவு விட்டால் போதும் என நினைக்கும் மாணவர்களுக்கு மத்தியில் முதலமைச்சரிடமே பள்ளியை சீக்கிரமா திறங்க சார் என 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
ஓசூரில் காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பெண் ஒருவர் நிறுத்தி முகக்கவசம் இல்லாமல் உங்கள் முகத்தை காண வேண்டும் எனக்கூறிய சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இன்ப அதிர்ச்சி அளித்தார். குதூகலத்துடன் முதல்வருடன் பேசிய அப்பெண்ணின் மகளான 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரிஷ்மயா, சார் சீக்கிரம் பள்ளியை திறங்க, வீட்டிலேயே இருக்க முடியவில்லை என முகத்தில் மகிழ்ச்சி பொங்க பேசினார்.