நண்பரின் மனைவியை தவறாக பேசிய இளைஞர் : கொடூர கொலையில் முடிந்த விபரீதம்..!

நண்பரின் மனைவியை தவறாக பேசிய இளைஞர் : கொடூர கொலையில் முடிந்த விபரீதம்..!

நண்பரின் மனைவியை தவறாக பேசிய இளைஞர் : கொடூர கொலையில் முடிந்த விபரீதம்..!
Published on

காஞ்சிபுரத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்கின்ற இளைஞர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக ஒரகடம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில், போலீசாருக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்தது.

அதன்படி, நண்பனின் மனைவி குறித்து பிரதாப் தவறாக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த நண்பன் தனது 2 கூட்டாளிகளுடன் பிரதாப்பை கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் அவரது தலைமை துண்டித்து, ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் உடலை கல்லை கட்டி வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பிரியா உத்தரவின்பேரில், கிணற்றில் உள்ள நீரினை தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் வெளியேற்றி, பிரதாப்பின் உடல் மற்றும் தலையை போலீசார் கைப்பற்றினர். பின்னர் திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். மேலும் பிரதாப்பின் நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com