'ஓர் இரவில் மோசமான வீரராக மாறிவிட முடியாது'-யாருக்கு 'சப்போர்ட்' செய்கிறார் டிவில்லியர்ஸ்

'ஓர் இரவில் மோசமான வீரராக மாறிவிட முடியாது'-யாருக்கு 'சப்போர்ட்' செய்கிறார் டிவில்லியர்ஸ்
'ஓர் இரவில் மோசமான வீரராக மாறிவிட முடியாது'-யாருக்கு 'சப்போர்ட்' செய்கிறார் டிவில்லியர்ஸ்
Published on

ஒரு பேட்ஸ்மேனுக்கு ஓரிரு மோசமான ஆட்டங்கள் அமைந்துவிடும், ஆனால் அதுவே தொடர்கதை ஆனால் மீண்டு வருவது சற்று கடினம்தான் என்கிறார் தென்னாப்பிரிக்கா அணியின் டிவில்லியர்ஸ்.

இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் கேப்டன் பதவியை துறந்த கோலி, எந்தப் பிரஷரும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதுவரை 10 ஆட்டங்களில் மொத்தம் 186 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தது மட்டுமே ஆறுதல்.

இது குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் "ஒரு பேட்ஸ்மேனுக்கு ஓரிரு மோசமான ஆட்டங்கள் அமைந்துவிடும், ஆனால் அதுவே தொடர்கதை ஆனால் மீண்டு வருவது சற்று கடினம்தான். இதனால் ஓர் இரவில் ஒரு பேட்ஸ்மேன் மோசமான வீரராக உருவாகிட முடியாது. இது கோலிக்கும் தெரியும், எனக்கும் தெரியும். இவை எல்லாமே மன நிலை சம்பந்தப்பட்டதுதான். விளையாட போகும்போது நல்ல மன நிலையும், உத்வேகமும் இருந்தாலே போதும், இந்த பிரச்னையில் இருந்து வெளியே வரலாம்" என்றார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 49-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூரு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஏற்கெனவே விளையாடிய லீக் போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. எனவே இந்தப் போட்டியிலும் பெங்களூரு அணியை சிஎஸ்கே சிங்கங்கள் வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com