உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டத்தைத் தூண்டிவிடுவதாக ஏ.என்.ஐக்கு கொடுத்த பேட்டியில் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்த பிறகு, திரிணாமுல் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் உட்பட பலரும் நேரில் சென்று சந்தித்தனர்.
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏ.என்.ஐக்கு கொடுத்த பேட்டியில்
“ எதிர்க்கட்சிகள் ஜாதி, மத மற்றும் இன அடிப்படையில் கலவரத்தை தூண்டிவிடுகின்றன. ஆட்சியில் உள்ள முன்னேற்றத்தைப் பார்க்காமல், சதித்திட்டங்களை வகுக்கிறார்கள். ஒருவரின் இறப்பை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.