உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகருக்குச் சென்ற அரசியல்வாதி முதலமைச்சர் பதவியை இழப்பார் என்ற அவநம்பிக்கையை யோகி ஆதித்யநாத் முறியடித்திருக்கிறார்.
1988ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் வீர் பகதூர் சிங். அவர் நொய்டா நகருக்கு சென்று வந்ததும் தனது முதல்வர் பதவியை இழந்தார். அடுத்து வந்த முதலமைச்சர் திவாரி, 1989ஆம் ஆண்டு நொய்டாவில் ஒரு பூங்காவை திறந்து வைத்தார். அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதன் பிறகு வந்த கல்யாண் சிங் மற்றும் முலாயம் சிங் ஆகியோரும் நொய்டா சென்று வந்த சிறிது நாட்களில் முதலமைச்சர் பதவியை இழந்தனர். 2007ல் முதல்வரான மாயாவதி, அதே ஆண்டு நவம்பரில் நொய்டாவுக்குச் சென்றார். அடுத்த தேர்தலில் 2012ஆம் ஆண்டு அவரது கட்சி தோல்வியடைந்தது.
இந்தச் சூழலில், நொய்டாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் மீண்டும் உத்தரப் பிரதேச முதல்வராவதன் மூலம் நொய்டா தொடர்பான அவநம்பிக்கை விலகியுள்ளது. கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சுபவதி சுக்லாவை வீழத்தி மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க 5 காரணங்கள் என்ன? - விரிவான அலசல்