"மோசமான பின்னடைவு" - சென்னையில் 59 வார்டுகளில் டெபாசிட் இழந்த அதிமுக

"மோசமான பின்னடைவு" - சென்னையில் 59 வார்டுகளில் டெபாசிட் இழந்த அதிமுக
"மோசமான பின்னடைவு" - சென்னையில் 59 வார்டுகளில் டெபாசிட் இழந்த அதிமுக
Published on

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் 59 வார்டுகளில் அதிமுக டெபாசிட் இழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சென்னை நகரில் உள்ள 200 வார்டுகளில் 173 வார்டுகளில் அதிமுக இரண்டாம் இடம் பிடித்திருந்தது. ஆனால் 59 வார்டுகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. மேலும் 111 வார்டுகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது. 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வாக்கு சதவிகிதம் ஒற்றை இலக்கத்தில் இருப்பது கட்சிக்கு பின்னடைவாக உள்ளது.

அதிமுக டெபாசிட் இழந்த பல இடங்களில் பாஜக மற்றும் பாமகவின் வேட்பாளர்கள் அக்கட்சி வேட்பாளர்களை மூன்றாம் இடத்திற்கு தள்ளிவிட்டனர். உதாரணமாக மாத்தூரில் அமைந்துள்ள 19ஆம் வார்டில் அதிமுக 9.5 சதவிகித வாக்குகளையே பெற்றது, அங்கு பாரதிய ஜனதா 19% வாக்குகளை பெற்றிருந்தது.

இதுவரை அதிமுக சந்தித்ததிலேயே இதுவே மோசமான தோல்வி என சில அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com