கடனாக வாங்கிய பிகினியை திருப்பி கொடுக்காத பெண்.. நெட்டிசன்களின் உதவியை நாடிய தாய்!

கடனாக வாங்கிய பிகினியை திருப்பி கொடுக்காத பெண்.. நெட்டிசன்களின் உதவியை நாடிய தாய்!
கடனாக வாங்கிய பிகினியை திருப்பி கொடுக்காத பெண்.. நெட்டிசன்களின் உதவியை நாடிய தாய்!
Published on

ஒரு பொருளை கொடுத்து இன்னொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறை ஆதி காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்து வரும் நடைமுறைதான். இப்போது அந்த பழக்கம் எல்லா இடங்களிலும் இல்லையென்றாலும், அக்கம் பக்கத்து வீட்டினருக்கு நம்மிடம் இருக்கும் பொருட்களை அவர்களிடமோ, அவர்களிடமிருந்து வாங்கும் பழக்கம் என்னவோ இன்றளவும் எல்லார் மத்தியிலும் அழியாத பழக்கமாகதான் உள்ளது.

அப்படி கொடுக்கும் பொருட்களை சிலர் சரியாக பயன்படுத்திவிட்டும் தருவார்கள், சிலர் அந்த பொருளை உடைத்தோ அல்லது முறையாக பராமரிக்காமலும் கொடுப்பார்கள். அதேநேரம் வாங்கி பொருளை திருப்பி கொடுக்காமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மாதிரியான நிகழ்வு பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

தன்னுடைய குழந்தைக்காக ஆசை ஆசையாக வாங்கிய பிகினியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணின் குழந்தைக்காக கொடுத்திருக்கிறார். அந்த பெண்ணோ அந்த பிகினியை பயன்படுத்திவிட்டு திருப்பி கொடுக்காமல் இருக்கிறார். இதனை அவரிடம் எப்படி கேட்பது என தெரியாமல் அந்த பெண் Mumsnet என்ற வலைதளத்தில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

கடந்த ஜூலை 24ம் தேதி பகிரப்பட்ட அந்த பதிவில், “கடந்தவாரம் இறுதியில் எங்க குடியிருப்புக்கு அருகே தோட்டத்தில் பெரிய நீச்சல் குளம் உருவாக்கப்பட்டு அதில் குழந்தைகளுக்காக நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. என்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு என்னுடைய மகளை விட 2 வயது பெரிய பெண் குழந்தை இருக்கிறார்.

அவர் அந்த நீச்சல் குளத்தில் விளையாட என் மகளின் நீச்சல் உடையை தரமுடியுமா என கேட்டார். அந்த பெண்ணின் மகன் என் மகளை விட உயரமாகவும் பெரியவளுமாக இருப்பார். அதனால் என் மகளுக்காக புதிதாக வாங்கிய பிகினி சூட்’டை அந்த குழந்தைக்காக வழங்கினேன்.

ஆனால் ஒருவாரமாகியும் என்னிடம் இருந்து வாங்கிய பிகினியை அந்த பக்கத்து வீட்டு பெண் திருப்பி கொடுக்கவில்லை. பெரிய ஷாப்பில் இருந்து வாங்கிய அந்த பிகினியை என் மகள் ஒருமுறை மட்டுமே அணிந்திருந்தார். அவர்களா வந்து திருப்பி கொடுப்பார்கள் என காத்திருந்தேன். ஆனால் ஒரு வாரமாகியும் அந்த பெண் திருப்பி கொடுக்கவில்லை. அந்த பெண்ணின் குழந்தையும் அந்த பிகினி போட்டுக்கொண்டு நீச்சல் குளத்தில் விளையாடுவதையும் பார்த்தேன்.

இப்போது நானாக சென்று என் மகளுக்காக வாங்கிய பிகினியை திருப்பி கேட்கவா வேண்டாமா என தெரியவில்லை. தயக்கமாகவும் இருக்கிறது. அந்த குழந்தையும் அதனை தொடர்ந்து அணிந்திருப்பதால் கேட்பதற்கு அசெளகரியமாக இருக்கிறது. என் குழந்தைகாக ஆசையாக வாங்கியதை அவர்கள் திருப்பி கொடுக்காமல் இருப்பது கோபமாகவும் இருக்கிறது என்ன செய்வதென புரியவில்லை. நானே சென்று கேட்டிடவா அல்லது இதை ஒரு பாடமாக கொண்டு அப்படியே விட்டுடவா?” என சக இணையவாசிகளிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனைக் கண்ட பலரும், இதில் நீங்கள் தயங்குவதற்கோ குற்றவுணர்ச்சியோடு இருப்பதால் எந்த பயனும் இல்லை. நீங்கள் கொடுத்த பிகினியை திருப்பி கேட்டு பெறுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள். ஒரு சிலர், போனால் போகட்டும் வேறு வாங்கி விடுங்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com