வரலாறு காணாத வகையில் பிரிட்டனில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலரது இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது. பிரிட்டன் மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளிலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகிறார்கள்.
இதனால் குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக மின்சாரத்திற்கான தேவையில் ஒருசேர உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக கோட் சூட் போடும் போது டை கட்டுவதை தவிர்க்குமாறு அண்மையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில், சூரிய ஒளியில் ஒய்யாரமாக படுத்திருந்தவரின் முகம் பிளாஸ்டிக் போன்று உரிந்திருக்கும் சம்பவம் பல்கேரியாவுக்கு வெகேஷனுக்காக சென்ற பிரிட்டன் பெண்ணுக்கு நடந்திருக்கிறது.
25 வயதான சிரின் முராத் ஒரு பியூட்டிசியன். இவர் பல்கேரியாவுக்கு சுற்றிப்பார்க்கச் சென்ற போது அங்குள்ள கடற்கரையில் சுமார் 30 நிமிடங்களுக்கு 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூரிய ஒளியின் கீழ் படுத்திருந்திருக்கிறார்.
தூங்கிமுடித்து எழுந்த சிரினின் முகம் செவந்துப்போனதோடு புண்களும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதனை பொருட்படுத்தாது தன்னுடைய ஹாலிடேவை கொண்டாடியிருக்கிறார்.
ஆனால் மறுநாள் வரை அவரது கொண்டாட்ட மனம் நீடித்திருக்கவில்லை. ஏனெனில் சிரினின் முகம் இறுகிப்போனதோடு, அவரது நெற்றி பிளாஸ்டிக் போன்று ஆகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பிளாஸ்டிக் தோல் இறுக இறுக வலியை கொடுத்ததோடு, உரியவும் தொடங்கியிருக்கிறது.
இதற்காக அவர் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டு, தன்னுடைய குடும்பத்தாரிடம் மட்டுமே இதுகுறித்து கூறியிருக்கிறார். இதனையடுத்து அவருக்கு மேன்மேலும் முகத்தில் வலியை கொடுத்திருக்கிறது.
நெற்றி மற்றும் முகத்தில் இருந்த பிளாஸ்டிக் போன்ற தோலும் உரிந்து கொட்டியிருக்கிறது. இது சிரினின் முகம் பிங்க் நிறத்தில் மாறியிருக்கிறது. சன் ஸ்க்ரீன் லோஷன் எதுவும் போட்டுக்கொள்ளாமல் நேரடியாக சூரிய ஒளியின் கீழ் படுத்திருந்ததால் சிரினிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் சிரினின் முகத்தில் இருந்த பிளாஸ்டிக் தோல்கள் அனைத்தும் உரிந்து கொட்டவே அவருக்கு ஒரு வித ரிலீஃபை கொடுத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து விடுபட ஏழு வாரங்கள் ஆனது என்றும், தற்போது கண்கள் கீழ் சில தடங்களும், முகத்தில் நிற மாற்றங்கள் மட்டுமே இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஆகவே சூரிய ஒளியில் உலாவுவோர் கட்டாயம் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும் என்று தோல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், யுவி கதிர்களிடம் இருந்து தோலை பாதுகாப்பதோடு, தோலின் நிறம் மாற்றத்தையும் தடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.