ஆறறிவு கொண்ட மனிதர்கள் உட்பட எந்த உயிரினங்களாக இருந்தாலும், அம்மாக்களின் அன்புக்கும் பாசத்துக்கு நிகராக வேறு எதுவும் இருக்காது என்பது அவ்வப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக காணக் கிடைக்கும் காணொலிகள் மூலம் அறியக் கூடும்.
அந்த வகையிலான வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு வைரலானதோடு, நெட்டிசன்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி, தாய் ஒருவர் தனது மகள் மழையில் நனைந்துவிடக் கூடாது என எண்ணி தன் தோளில் சுமந்து செல்லும் காட்சிதான் இணையவாசிகளின் மனதை கவர்ந்திருக்கிறது.
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">मां तो आखिर मां होती है <a href="https://t.co/bpY7J8sJMK">pic.twitter.com/bpY7J8sJMK</a></p>— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) <a href="https://twitter.com/Gulzar_sahab/status/1596514614593744897?ref_src=twsrc%5Etfw">November 26, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அதில், பள்ளிக்கு செல்லும் போது அல்லது பள்ளியில் இருந்து அழைத்து வரும் வழியில் மழை வந்ததால் தனது ஆசை மகள் மழையில் நனைந்துவிடக் கூடாது என எண்ணி புத்தகப் பையுடன் சேர்த்து தனது தோளில் சுமந்துக் கொண்டும், ஒரு கையில் குடையை பிடித்தபடி வெறும் காலில் நடந்து செல்கிறார் அந்த தாய். அந்த குழந்தையும் சிரித்தபடியே அம்மாவின் தோளில் ஒய்யாரமாக உட்கார்ந்து குடைக்குள் இருந்தபடியே மழையை ரசிக்கிறது.
வெறும் 18 நொடிகளே இருக்கக் கூடிய அந்த வீடியோ பதிவில், “எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அம்மா அல்லவா” இந்தியில் கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், “அம்மாக்களின் அன்பை பற்றி என்னவென்று சொல்ல” என்றும்,
“அம்மாக்களால் மட்டுமே இப்படியெல்லாம் முடியும்” என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்கள்.