அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் - இதுவும் அட்மினா..?

அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் - இதுவும் அட்மினா..?
அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் - இதுவும் அட்மினா..?
Published on

நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ஓபிஎஸ் தனது ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில், “எதிர்காலத்தில் அஜித் குமார் உடல் நலத்துடன், மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ வாழ்த்துகிறேன். திரைத்துறையில் அவர் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித்குமார். நீண்ட நாள் வெற்றியோடு வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பதிவை தான் பதிவிடவில்லை என்றும் தன்னை அறியாமல் தனது ட்விட்டரில் பதிவு போட்டு விட்டனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். 

அமைச்சர் செங்கோட்டையன் தான் வாழ்த்து சொல்லவில்லை என்று மறுத்து இருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதனால், சமூகவலைதளங்களில் இதுவும் அட்மின் போட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com