அதிமுக அம்மாவும் , குக்கரும் தினகரனுக்கு கிடைக்குமா ?

அதிமுக அம்மாவும் , குக்கரும் தினகரனுக்கு கிடைக்குமா ?
அதிமுக அம்மாவும் , குக்கரும் தினகரனுக்கு கிடைக்குமா ?
Published on

அதிமுக அணிகளாக செயல்பட்ட போது பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா என்றும் சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்றும் தற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அணிகள் இணைந்ததால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணியே அதிமுக என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதனால், ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என  எதிர்பாக்கப்படுகிறது. இதனால் அணிகளாக இருந்த சமயத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும் , குக்கர் சின்னத்தையும் தனக்கு அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (9.03.2018) பிறப்பிக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் மாநில தேர்தல் ஆணையமே முடுவெடுக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் வாதிட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து அந்த பெயரை பயன்படுத்த அனுமதிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம் உண்டென தினகரன் தரப்பு வாதிட்டிருந்தது. நீதிமன்றமும் தினகரன் கோரிக்கை ஏற்க முடியுமா என தேர்தல் ஆணையத்தை வினவியிருந்தது. இந்நிலையில் தினகரன் மீண்டும் குக்கரை கைப்பற்றுவாரா என நாளை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com