‘எல்லாரும் ஒதுங்குங்க... நாங்க ஷாட் ரூட்ல போணும்’ மருதமலை முருகன் கோயிலில் யானைகள் ஜாலி வாக்கிங்!

கோவை மருதமலை படிக்கட்டுகள் வழியாக காட்டு யானைகள் கூட்டமாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது முருகக்கடவுளின் மருதமலை. இங்கு சுவாமி தரிசனத்திற்காக பல பக்தர்கள் அதிக அளவில் நாள்தோறும் வந்து செல்வர். இக்கோயிலுக்கு செல்வதற்கான படிக்கட்டு வழிப்பாதை, வாகனங்கள் செல்லும் வழிப்பாதை இரண்டுமே வனப் பகுதியை மிகவும் ஒட்டியதாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருதமலையை ஒட்டிய வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை ஒட்டிய வனப்பகுதியில் யானை ஒன்று ஒருவரை மிதித்து கொடூரமாக கொன்றது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல பல்வேறு நேர கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.

யானைகள் கூட்டம் மருதமலை
க்யூட் ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக மாறிய குட்டி யானை! #ViralVideo

இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகவும், வெளிச்சம் இல்லாத பகுதிகளிலும் நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மருதமலை கோவிலில் பக்தர்கள் படியேறி செல்லும் பகுதியில் காட்டு யானை கூட்டமொன்று நகர்ந்து செல்லும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com