‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது?

‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது?
‘நக்கீரன்’ கோபால் கைதுக்குப் பின் என்ன நடந்தது?
Published on

‘நக்கீரன்’கோபால் மீது ஆளுநரின் துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் பேரிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரிமாண்ட் ரிபோர்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜாம்பஜார் காவல்நிலைய சட்டம் ஒழுங்குப்பிரிவு காவல் ஆய்வாளரிடம், ஆளுநர் அலுவலகத்தின் துணை செயலாளர் செங்கோட்டையன் நேற்றிரவு 8 மணியளவில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். 

அந்தப் புகார் மனு அடிப்படையில் ஜாம்பஜார் காவல்நிலைய காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிமாண்ட் ரிப்போர்ட் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. அதில், 2018 ஏப்ரல் 20-22 தேதியிட்ட‘நக்கீரன்’அட்டைப்பட கட்டுரை தொடர்பாக ஆளுநரின் துணை செயலாளர் செங்கோட்டையன் காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில், ஜாம்பஜார் காவல்நிலையத்தில்‘நக்கீரன்’கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்! பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து !’ என்ற வாசகத்துடன், ஆளுநரின் புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட்டதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான விரிவான கட்டுரையும் எழுதப்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே ‘நக்கீரன்’ கோபால் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் ஜாம்பஜார் காவல்நிலைய ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நக்கீரன் கோபல் கைதுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, நக்கீரன் கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com