டிரெண்டிங்
இலங்கையில் இன ஒடுக்குமுறைதான் தமிழர்களின் எண்ணிக்கை குறைய காரணமா? தற்போதைய நிலவரம் என்ன?
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் தமிழர்களின் உரிமை இன்னும் கேள்விக்குரியாக தான் இருக்கிறது. தமிழர்கள் பகுதியை இலங்கை அரசாங்கம் ஆக்கிரமித்து அங்கு சிங்கள மக்களும், புத்த விகாரங்களும் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை இன ஒடுக்குமுறையால் மிகக்குறைந்து வருகிறதா?
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் முடிந்திருந்தாலும், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். யுத்தகாலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் அது போன்ற சம்பவங்கள் தலை தூக்குவது போல் இருக்கிறது.
மட்டகளப்பு மாகாணத்தில் இருக்கக்கூடிய மைனர் தம்புடு திரிகோணமலை போன்ற தமிழர்களின் பூர்வீக இடங்களில், சிங்கள குடியேற்றங்களும் புத்த விகாரங்களும் கட்டப்பட்டு வருகிறது.
அது போல் வடக்கில் மகாபலி நதிநீர் திட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களும் மக்கள் குடியிருப்புகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள குடியேரும் இடமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது