பாஜக அழுத்தத்தால் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம்: காங். குற்றச்சாட்டு

பாஜக அழுத்தத்தால் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம்: காங். குற்றச்சாட்டு
பாஜக அழுத்தத்தால் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம்: காங். குற்றச்சாட்டு
Published on

பாஜக அழுத்தம் காரணமாகவே குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் செய்யப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இமாச்சல பிரதேசத்திற்கு மட்டும் நவம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவும், டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ஜோதி அறிவித்தார். மேலும், குஜராத் தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிசம்பர் 18-ம் தேதிக்கு முன்பாக குஜராத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. குஜராத் தலைநகர் காந்திநகரில் அடுத்த வாரம் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அப்போது மோடி புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். பின்னர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட முடியாது. இதனால், பாஜக அழுத்தம் காரணமாக தேர்தல் அறிவிப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அதேபோல், இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, ‘குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியிடாததற்கு என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டது? இதனை நியாயப்படுத்த சரியான காரணங்கள் வேண்டும். எதிர்பாராதவிதமாக அடுத்தவாரம் குஜராத்தில் மோடி மேற்கொள்ள உள்ள பயணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com