தமிழக மக்கள் கேட்டபோது வீடியோ வெளியிடாதது ஏன்? : அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி

தமிழக மக்கள் கேட்டபோது வீடியோ வெளியிடாதது ஏன்? : அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி
தமிழக மக்கள் கேட்டபோது வீடியோ வெளியிடாதது ஏன்? : அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி
Published on

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடியோவை, தமிழக மக்கள் கேட்டபோது ஏன் வெளியிடவில்லை என்று அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து புதிய தலைமுறை செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், வெற்றிவேலை கைது‌ செய்து அவர் தன்னிடம் இருப்பதாகக் கூறிய வீடியோக்களை பறிமுதல் செய்து விசாரணை ஆணையம் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாடு மக்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏதேனும் புகைப்படம் இருந்தால் வெளியிடுங்கள் என்று கேட்டபோதே வீடியோவை ஏன் வெளியிடவில்லை? மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்றதாக வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோ உண்மை என்றால், ஜெயலலிதா ஏன் உயிருடன் வீடு திரும்பவில்லை” என்றார். மேலும், போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன என்றும், எந்த சூழலில் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து “உயர்நீதிமன்றத்தில் ஆதாரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை? நாளை ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று சிகிச்சை வீடியோவை வெளியிட காரணம் என்ன?” என்றார். மேலும் சசிகலாதான் வீடியோவை எடுத்தார் என்றால் அவர் பதில் கூற வேண்டும் என்றும் கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com