பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்ப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக களத்தில் இருந்தன. இதனால் அங்கு நான்கு முனைப் போட்டி நிலவியது.
இதில் காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், பஞ்சாபில் எந்தெந்தக் கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு:
ஆம் ஆத்மி - 76- 90
காங்கிரஸ் - 19- 31
சிரோன்மணி அகாலி தளம் - 7 - 11
பாஜக கூட்டணி - 0 - 1
பி - மார்க் கருத்துக்கணிப்பு:
ஆம் ஆத்மி - 62 - 70
காங்கிரஸ் - 23 - 31
சிரோன்மணி அகாலி தளம் - 16 - 24.
பாஜக கூட்டணி - 1 -3