பூமியில் விழுந்த அரிதான விண்கல் யாருக்கு சொந்தம்? ஸ்வீடனில் 4 வருட இழுபறிக்குபின் வெளியான தீர்ப்பு

இந்தியாவைப் பொருத்தவரை, பூமியிலிருந்து கிடைக்கும் தனிமங்கள் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் இத்தகையவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடும் பொழுது, அதன் காலகட்டத்தில் குத்தகைதாரர்கள் அதை உரிமை கொண்டாடலாம்.
இரும்பு விண்கல்
இரும்பு விண்கல்கூகுள்
Published on

விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள் வளிமண்டலத்தை கடக்கும் பொழுது, பெரும்பாலும் எரிந்து சாம்பலாக விழும், ஆனால் அதில் ஒருசில பாறைகளாகவும் கற்களாகவும் பூமியில் வந்து விழும். இப்படி விழும் கற்கள் யாருக்கு சொந்தமாகும்? இது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று என்றாலும் ஒவ்வொரு நாடும் தங்களுக்கொன்று ஒரு சட்டத்தை வைத்து இருக்கிறது. பிரான்ஸ் மற்றும் மொராக்கோவில், "அதன் மீது முதலில் கைகளை வைப்பவருக்கு அதன் உரிமை உள்ளது" என்கிறது. டென்மார்க்கில், அவை அரசின் சொத்து. US Bureau of Land Management பொது நிலங்களில் விழும் விண்கற்களுக்கான விதிகளை கோடிட்டுக் காட்டுகிறது.

இரும்பு விண்கல்
ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை நிறுவ திட்டமிடுகிறதா? - பின்னணி என்ன?

இந்தியாவைப்பொருத்தவரை, பூமியிலிருந்து கிடைக்கும் தனிமங்கள் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் இத்தகையவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடும் பொழுது, அதன் காலகட்டத்தில் குத்தகைதாரர்கள் அதை உரிமைக்கொண்டாடலாம்.

இது இப்படி இருக்க, ஸ்வீடனில் இரும்பு விண்கல் ஒன்று நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருவரின் நிலத்தில் விழுந்திருக்கிறது. இது யாருக்கு சொந்தம்? புவியியளாலருக்கும், நிலத்தின் உரிமையாளருக்கும் நடந்த சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்றவர் யார்? என்பதை பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடனில் ஸ்டாக்ஹோமுக்கு வடக்கே உள்ள அடர்ந்த பைன் காடுகளின் நடுவில் பெரிய சத்தத்துடன் விண்கல் ஒன்று விழுந்துள்ளது. பூமியில் விண்கல் விழுந்ததை தெரிந்துக்கொண்ட விஞ்ஞானிகள் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். புவியியலாளரான Anders Zetterqvist, என்பவர், விண்ணிலிருந்து விண்கல் கடந்து வந்த பாதையைத் தொடர்ந்து வந்து, நான்காண்டு தேடுதலுக்கு பிறகு அது விழுந்த இடத்தை கண்டுபிடித்தார்.

மற்றொரு புவியியலாளரான ஆண்ட்ரியாஸ் ஃபோர்ஸ்பெர்க் என்பவர் அது நிலத்தில் புதையுண்ட இடத்தை கண்டுபிடித்து அதை தோண்டி எடுத்துள்ளார். இருவருக்கும் ஆச்சர்யம் தாளவில்லை. காரணம் அந்த விண்கல் 30 பவுண்ட் எடையுள்ள இரும்பு விண்கல். இத்தகைய விண்கல் மிகவும் அரிதானவை மற்றும் விலைமதிப்பற்றவை. ஆகவே, கைகளில் கிடைத்த இரும்பு விண்கல்லை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்று வைத்தனர். அதுமுதல் இரும்பு விண்கல்லானது 2020 முதல் அருங்காட்சியகத்திலேயே இருந்து வந்திருக்கின்றது.

ஆனால் சமீபத்தில் விண்கல் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான ஜோஹன் பென்செல்ஸ்டீர்னா வான் என்ஜெஸ்ட்ராம் என்பவர், அருங்காட்சியகத்திற்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், என் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட விண்கல்லானது எனது அசையா சொத்து. என்று அதற்கு உரிமை கோரியிருந்தார். சட்டப் போராட்டம் நடந்தது.

டிசம்பர் 2022 இல், உப்சாலா மாவட்ட நீதிமன்றமானது, "புதிதாக விழுந்த விண்கல் அது நிலத்தில் விழுந்த சொத்தின் ஒரு பகுதியாக இல்லை" ஆகவே இது அசையும் சொத்து , அரசாங்கத்தின் சொத்து என்று புவியியலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

ஆனாலும், நில உரிமையாளரான ஜோஹன் பென்செல்ஸ்டீர்னா வான் என்ஜெஸ்ட்ராம், இதை இத்துடன் நிறுத்தவில்லை மேல் முறையீடு செயதார். இதில் இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி கிரீன் தனது தீர்ப்பில், “விண்கற்கள் அல்லது விண்வெளிப் பாறைகளை மற்ற கற்களைப் போலவே அசையா சொத்தின் ஒரு பகுதி, ஆகவே, விண்கல்லை அசையாச் சொத்தாகக் கருத வேண்டும் என்று வாதிட்டார், இந்த வழக்கில், வழக்கமான சட்டமும் பயன்படுத்தப்பட்டது, இறுதியில், இந்த விண்கல்லானது நில உரிமையாளர்க்கு சொந்தம் என்று மாற்று தீர்ப்பு வந்தது.

இதனால் புவியியலாளர்கள் மனவருத்தம் கொண்டதுடன், மீண்டும், இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் விரும்பவில்லை. வழக்கின் தீர்ப்பு குறித்து புவியியளாலர்கள் பேசும் பொழுது, ”இது எனக்கும் எனது நண்பருக்கும் மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் வாழ்நாள் முழுவதும் பாறைகள் மற்றும் புதைபடிவங்களை சேகரிப்பதில் ஆர்வமாக இருந்தோம். வழக்கின் இத்தகைய தீர்ப்பு, புதிய விண்கற்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டும் ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ” என்று கூறியுள்ளனர்.

நில உரிமையாளர், Benzelstierna von Engestrom, நீதிமன்ற தீர்ப்பை பற்றி ஒரு நேர்காணலில் பேசும்பொழுது, "நான் விண்கல்லின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன், ஆனால் பொதுமக்களின் பயனுக்காக, நிரந்தரக் கடனில் ஸ்வீடிஷ் அருங்காட்சியகத்திற்கு விண்கல்லை வழங்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இருப்பினும் எந்த அருங்காட்சியகம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com