தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- இன்று இரவு 7 மணிக்கு புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- இன்று இரவு 7 மணிக்கு புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- இன்று இரவு 7 மணிக்கு புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு
Published on

தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது ஆளுங்கட்சி கூட்டணியா, எதிர்க்கட்சி கூட்டணியா, வேறொரு அணியா அல்லது இழுபறியா. மக்களின் கருத்து என்ன. என்று அறிந்து வந்திருக்கும் புதிய தலைமுறை, தமிழகத்தின் கருத்துக் கணிப்பை இன்றிரவு 7 மணிக்கு நேரலையில் வெளியிடுகிறது.

புதிய தலைமுறை தேர்தல் கருத்துக் கணிப்பு இன்றிரவு 7 மணிக்கு. 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்கள், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் என 3 தேர்தல் முடிவுகளை துல்லியமாக கருத்துக் கணிப்பில் தெரிவித்த புதிய தலைமுறை, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஆய்வின் மூலம் தகவல் திரட்டியுள்ளது. பிப்ரவரி 18 முதல் மார்ச் 15வரையில், தமிழகத்தின் 20 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு, கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பகுதியிலும் 25 பேரிடம் ஆய்வுக் குழுவினரால் தயார் செய்யப்பட்ட கேள்விகள் மூலம் பதில்கள் பெறப்பட்டன. நடுநிலை பிறழாது நேர்மையுடன் மக்களின் மனதை அறிந்து வந்துள்ள இந்தக் கணிப்பு, இன்றிரவு 7 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது ஆளுங்கட்சி கூட்டணியா, எதிர்க்கட்சி கூட்டணியா, வேறொரு அணியா அல்லது தேர்தல் முடிவில் இழுபறி நிலையா என்பதை அறிய, காத்திருங்கள் இரவு 7 மணி வரை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com