யார் இந்த இசக்கி சுப்பையா?

யார் இந்த இசக்கி சுப்பையா?
யார் இந்த இசக்கி சுப்பையா?
Published on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. அந்த ஆண்டில் அவருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கினார் ஜெயலலிதா. ஆனால், சில மாதங்களிலேயே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அரசியலில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் பல்வேறு தொழில்களை இசக்கி சுப்பையா செய்து வருகிறார். ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலாவிற்கு தனது முழு ஆதரவையும் இசக்கி சுப்பையா வழங்கினார்.

டிடிவி தினகரன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கி பழகி கூடிய ஒரு நபராகவே இசக்கி சுப்பையா பார்க்கப்பட்டார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த அவர், அசோக் நகரில் உள்ள தனது கட்டடத்தை கொடுத்து உதவினார். அந்த கட்டடத்தில்தான் தற்போது அமமுகவின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக இசக்கி சுப்பையா போட்டியிட்டு தோல்வியுற்றார். தேர்தலில் அமமுக ஒரு இடம் கூட வெற்றி பெறாததால் பல்வேறு நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com