அதிமுக கூட்டணியில் இழுபறியில் உள்ள கட்சிகளின் நிலை என்ன? : அலசல்

அதிமுக கூட்டணியில் இழுபறியில் உள்ள கட்சிகளின் நிலை என்ன? : அலசல்
அதிமுக கூட்டணியில் இழுபறியில் உள்ள கட்சிகளின் நிலை என்ன? : அலசல்
Published on

அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா மற்றும் பல சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது.

அதிமுக முதற்கட்டமாக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருந்தது. இன்று இரண்டாம் கட்டமாக 171 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தமகா இதுவரை 177 பேர் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், பாமக சார்பில் 23 தொகுதிகள், பாஜக சார்பில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் வெறும் 14 இடங்களே உள்ளன. இதில்தான் தமாகா மற்றும் சிறிய கட்சிகள் பலவற்றிற்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியுள்ளது. 

அதிமுக மற்றும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது, இன்று அல்லது நாளை தமாகாவின் நிலை குறித்து உறுதியான நிலைப்பாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு 5 அல்லது 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளை கேட்டும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் 2 தொகுதி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி 2 இடங்களை கேட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செ.கு. தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி மற்றும் தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை தலா 2 தொகுதிகளை கேட்டு அதிமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறது.

புதிய தமிழகம் கட்சி இதுவரை நேரடியாக திமுக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, ஆனால் மறைமுகமாக அதிமுக, அமமுகவுடன் இக்கட்சி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com