திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டமாக நடைபெற உள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் தனியாகவும், பாஜக தனியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டாகவும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.
“வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவுள்ளது நாங்கள் தான். அதனால் மே மாதத்திற்கு பிறகு நீங்கள் ரேஷன் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு வர வேண்டியது இல்லை. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்” என புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில் மம்தா உறுதி கொடுத்துள்ளார். இந்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடியையும் கடுமையாக குற்றஞ்சாட்டினார் மம்தா பானர்ஜி.