திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது மட்டுமல்லாது பாஜக-வில் இணைந்த சுவேந்து அதிகாரி குடும்பத்தினரின் நிஜ முகத்தை அடையாளம் காண தவறிய கழுதை நான் என மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் சுவேந்து அதிகாரி. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் இதனை தெரிவித்துள்ளார் மம்தா.
‘பணத்தால் மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் பலம், அதிகாரி குடும்பத்தாரிடம் இருப்பதாக சொல்கிறார்கள். 5000 கோடி ரூபாய் வரை செலவிட வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என மம்தா தெரிவித்துள்ளார்.
சுவேந்து அதிகாரியின் தந்தையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான சிசிர் அதிகாரி பாஜகவில் இணைந்த நிலையில் இதனை மம்தா தெரிவித்துள்ளார்.