மேற்கு வங்கத்தில், ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடந்து நிறைவு பெற்றுள்ளது. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளை நாடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வாக்குப் பதிவின்போது, சில பகுதிகளில் வன்முறை நடந்தது என்றும் அந்த தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை வைத்திருந்தது.
இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம் உத்தர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 200-வது எண் வாக்குச்சாவடியில், நாளை (22 ஆம் தேதி) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.