பாரம்பரிய இசைக்கருவியை வாசித்த பிரதமர் மோடி - வீடியோ

பாரம்பரிய இசைக்கருவியை வாசித்த பிரதமர் மோடி - வீடியோ
பாரம்பரிய இசைக்கருவியை வாசித்த பிரதமர் மோடி - வீடியோ
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு மத்தள இசைக் கருவியை வாசித்து அசத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்பிகாபூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது, நக்சலைட்டுகள் ஆதிக்கமுள்ள பஸ்தார் பகுதிகள் அதிக வாக்குகள் பதிவானதற்காக பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், பஸ்தாரில் பதிவான வாக்குகளை விட அதிகமாக வாக்குகள் பதிவாக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு அம்பிகாபூரில் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார மேடையில் அமர்ந்த மோடியிடம் பாரம்பரிய மத்தள இசைக்கருவியை அப்பகுதி நிர்வாகிகள் கொடுத்தனர். அதனை தனது தோளில் மாட்டிக் கொண்ட மோடி கைகளால் வாசித்தார். பிரதமர் மத்தள கருவியை வாசித்தது எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

பிரதமர் மோடி இதுபோல் இசைக் கருவிகளை வாசிப்பது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் நேபாளம் சென்ற போதும், அந்நாட்டு மக்களின் இசைக்கருவிகளை இசைத்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com