கேரள சிபிஎம் கட்சி விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கமல்ஹாசன் விளக்கம்

கேரள சிபிஎம் கட்சி விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கமல்ஹாசன் விளக்கம்
கேரள சிபிஎம் கட்சி விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: கமல்ஹாசன் விளக்கம்
Published on

கேரளாவில் நடைபெறவுள்ள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிக்கு முன் அவர் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற கமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதலமைச்சர் பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘பினராய் விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன்’ என்று கூறினார். இது கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாக உள்ளதாக பேசப்பட்டது. 

இதனிடையே, “பகட்டு முட்டாள் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கட்சியில் சேரவிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்” என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு  முன்பு தெரிவித்து இருந்தார். மேலும், வருகிற 16-ந் தேதி கோழிக்கோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கருத்தரங்கிலும் கலந்துகொண்டு பேச இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் கமல் தனது ட்விட்டரில், “கேரள முதலமைச்சர் கலந்து கொள்ளும் கோழிக்கோடு கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருப்பேன். மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com