சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி
சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி
Published on

4 மாதங்களுக்கு பின்பு சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வந்தால் அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகஅரசு நாளை முதல் நிபந்தனைகளுடன் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது.


இந்நிலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அரசின் உத்தரவை மதித்து கோயிலுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருப்பி அனுப்பப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com