ஒரு தரமான ஹெல்மெட் என்ன செய்துவிடும்? -பயங்கரமான வீடியோவும்.. கற்பிக்கும் விழிப்புணர்வும்!

ஒரு தரமான ஹெல்மெட் என்ன செய்துவிடும்? -பயங்கரமான வீடியோவும்.. கற்பிக்கும் விழிப்புணர்வும்!
ஒரு தரமான ஹெல்மெட் என்ன செய்துவிடும்? -பயங்கரமான வீடியோவும்.. கற்பிக்கும் விழிப்புணர்வும்!
Published on

ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுவது எந்த அளவுக்கு நல்லதோ, அதே அளவுக்கு தரமான தலைக்கவசம் அணிவது அதி முக்கியமும் கூட.

தரமான ஹெல்மெட் அணிந்திருந்ததன் காரணத்தால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியும் உயிர் பிழைத்திருப்பது எத்தனை நல்வாய்ப்பான தருணம் என்பதை நினைத்துப்பார்க்கவே பூரித்துப் போய்விடும்.

அப்படியான சம்பவம் தொடர்பான வீடியோவைத்தான் பெங்களூரு நகரத்தின் கூடுதல் காவல்துறை ஆணையர் பி.ஆர்.ரவிகாந்தே கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் “சிறந்த தரமான ISI சான்று பெற்ற ஹெல்மெட் உயிரை காப்பாற்றும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், சாலையின் வலப்புறத்தில் இருந்து வந்த பேருந்து மீது மோதியதில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பேருந்தின் சக்கரத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

இதனை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் பஸ்ஸை உடனடியாக நிறுத்தியிருக்கிறார். ஆனால் விபத்தில் சிக்கியவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சில காயங்களோடு மட்டுமே மரணத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

43 ஆயிரத்துக்கும் மேலானோர் இந்த வீடியோ பார்த்து அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். அதில் “நல்ல தரமான சாலையும் கூட. நிச்சயம் பெங்களூருவாக இருக்காது.” என்றும், “இந்த நிகழ்வு இந்தியாவில் நடக்கவில்லையென்றாலும் ஹெல்மெட் அணிவது எத்தனை முக்கியமானது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

முன்னதாக சிசிடிவு காட்சியாக இருக்கும் இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் உள்ள Rio de Janeiro என்ற பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடந்ததாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com