பிரச்னைகள் இல்லாத மனிதர்களையே காண முடியாது என்ற அளவுக்கு பிரச்னைகளால் சூழப்பட்டவர்களே இங்கு ஏராளாமானோர் இருக்கிறார்கள்.
தெனாலி பட கமல்ஹாசனை போல ஆபிஸ் போனாலும் பிரச்னை, போகலனாலும் பிரச்னை, வீட்டுக்கு போனாலும் பிரச்னை, போகலனாலும் பிரச்னை, பேசினா பிரச்னை, பேசலனாலும் பிரச்னை.
இப்படி பிரச்னை எந்த ரூபத்தில் வரும் என எவருக்குமே தெரியாத வகையில் நாலாப்பக்கமும் பிரச்னையாகத்தான் இருக்கிறது என நித்தமும் பலரும் புலம்பித் தீர்த்துக்கொண்டே அந்த பிரச்னையோடு வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
ALSO READ:
ஆனால் ஒரு சிலரே அவரவர்களுக்கு நேரும் பிரச்னைகளை திறம்பட கையாண்டு அதனை சரிசெய்து மீண்டு செல்கிறார்கள். அதுவும் முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என சொல்வதை போல பிரச்னையை அந்த பிரச்னையை வைத்தேதான் தீர்க்க வேண்டும் என்பதற்கு ட்விட்டரில் வைரலான வீடியோ உதாரணமாக இருக்கிறது.
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவனின் தலை படிக்கட்டில் இருக்கும் இரண்டு கம்பியின் இடையே சிக்கியிருக்கிறது. அந்த சிக்கலில் இருந்து தனது மகனை காப்பாற்ற கம்பியை வளைக்கிறார், பையனை பிடித்து இழுத்து பார்க்கிறார். எதுவும் எடுபட்டதாக தெரியவில்லை.
ஒருகட்டத்தில் கம்பிக்கிடையே சிக்கிய சிறுவனே தன்னை அதிலிருந்து வெளியேற்றிக் கொள்கிறார். அதன்படி, சற்று எழுந்து நின்றுக் கொண்டு தனது வலது கை மற்றும் கால்களை வெளியே எடுத்துச் சென்று உடலை வளைத்து வெளியேறிவிடுகிறார்.
வெறும் 41 நொடிகளே இருக்கக் கூடிய அந்த வீடியோவை 17.8 மில்லியன் கிட்டத்தட்ட ஒன்றரை கொடியே 8 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
ALSO READ:
ஆகவே பிரச்னைகள் எந்த வடிவில் வந்தாலும் அதனை துணிந்து எதிர்கொண்டு தீர்க்க முற்படவேண்டுமே தவிர, துவண்டு போய்விடக் கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு துரும்பு சாட்சியாக இருக்கக் கூடும்.