காடுனு இருந்தா... ஒற்றையாக இருந்து 14 சிங்கங்களை விரட்டியடித்த குட்டி யானை!

காடுனு இருந்தா... ஒற்றையாக இருந்து 14 சிங்கங்களை விரட்டியடித்த குட்டி யானை!
காடுனு இருந்தா... ஒற்றையாக இருந்து 14 சிங்கங்களை விரட்டியடித்த குட்டி யானை!
Published on

காட்டுக்கு ராஜா யாருனு கேட்டதுமே அடுத்த நொடி யோசிக்கமா சிங்கம்னுதான் யாரா இருந்தாலும் சொல்லுவாங்க. ஆனால், அப்படிப்பட்ட சிங்கத்தையே ஒரு குட்டி யானை அலற விட்டுருக்குனு சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம் அப்படியான சம்பவம்தான் ஜாம்பியா நாட்டில் நடந்திருக்கிறது. இந் வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகியிருக்கிறது.

அதில் நீர் நிலையோரம் இருந்த குட்டி யானை ஒன்றை, ஒன்றல்ல இரண்டல்ல 14 சிங்கக்குட்டிகள் துரத்தி துரத்தி தாக்க முயற்சிக்கின்றன. சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் யானையை எல்லா பக்கமும் தடுத்து விடாபிடியாக துரத்துகின்றன.

இதில் சில சிங்கங்கள் அந்த யானையின் மீது ஏறி உட்காரவும் செய்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் தண்ணீர் இருக்கும் பக்கமாக சென்று அந்த யானை சிங்கங்களை விரட்ட தொடங்கியிருக்கிறது.

அதன்படி தனது குட்டி தும்பிக்கையை தூக்கியபடி அந்த 14 சிங்கங்களையும் ஓடி வந்து விரட்டவே அவைகளும் அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கின்றன. இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ். அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு, ”14 சிங்கங்களை ஒற்றை யானை தனியாக நின்று அவற்றை விரட்டியிருக்கின்றது. அப்போ காட்டின் ராஜா யாராக இருக்க வேண்டும்?” என கேப்ஷன் இட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை கிட்டத்தட்ட 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேலானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதில், “சந்தேகமே இல்லை, காட்டின் புதிய ராஜா யானைதான்” , ”இலக்கை நோக்கி தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி வந்து சேரும்” என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com