காய்கறிகள், பழங்களை நறுக்கும் வேலை பார்ப்பவர்களுக்கு அது சாதாரணமாக தெரிந்தாலும், அதனை செய்பவர்களுக்கே அதிலிருக்கும் கஷ்டங்கள் என்ன என்பது தெரியும். ஆனால் தற்போது இருக்கும் கேட்ஜெட் உலகில் எல்லா வேலைகளையும் சுலபமாக்கும் வகையில் பற்பல பொருட்கள் வந்தாலும் அவற்றையும் ஏக விலை கொடுத்தே வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது.
ஆனாலும் சமையலுக்கு முக்கியமான வேலையாக இருக்கக் கூடிய காய்கறி, பழங்களை வெட்டுவதற்கென்றே பல Do it yourself என்ற ட்ரிக்குகள் இருக்கின்றன. குறிப்பாக பூண்டு, வெங்காயம் உரிப்பது முதல் பழங்களை நுணுக்கமாக நறுக்குவது வரை பல வீடியோக்கள் சமூக வலைதளங்களிலேயே கொட்டிக் கிடக்கின்றன.
அந்த வகையிலான வீடியோ ஒன்றுதான் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை எட்டியிருக்கிறது. அதாவது அன்னாசி பழத்தை வெட்டி துண்டு போடுவதற்கென தனி சிரத்தையே மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதனை இந்த வீடியோவில் உள்ளதை போல செய்தால் நேர விரயம் மிச்சமாகும்.
அதன்படி அன்னாசி பழத்தின் கொண்டை மற்றும் அடிப்பாகத்தை வெட்டிய பிறகு வட்ட வடிவிலான துண்டாக போடுவதற்கு பதிலாக, பழத்தில் நடுவில் வெட்டியதும், 90 டிகிரி வாக்கில் திருப்பி, குறுக்காக வைத்து கேக் வெட்டுவது போல இருபுறமும் வெட்டினால் எந்த கஷ்டமும் இல்லாமல் எளிதில் பைனாப்பிள் ஸ்லைஸ் கிடைத்துவிடுகிறது!
இப்படி செய்வதால் நேரம் மிச்சமாவதுடன், வழக்கமான முறையில் சீவும் போது குறைந்த அளவில் பழம் கிடைப்பதும் தவிர்க்கப்படும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.