பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - அதாவது இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்பை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லி வைத்துள்ளார்.
அதன்படி இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீது வைத்திருக்கும் அன்பினாலேயே இந்த பூமி உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகையல்ல. பல இக்கட்டான சூழ்நிலையில் நம்மில் பலருக்கு யாதொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்தவர்கள் பட்டியல் என்று இருக்கத்தான் செய்யும். தர்மம் தலைகாக்கும் என்பது பழமொழி. அது பழைய மொழி என்று நினைக்காமல் இயலாதவருக்கு உதவும் மனிதாபிமானம் எல்லோருடைய மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் இல்லை.
https://www.facebook.com/madhubalan.velsamy/posts/276251046775470
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பார்வையற்ற நபர் ஒருவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அதைப்பார்த்த பெண் ஒருவர் ஓடி சென்று பேருந்தை நிறுத்துகிறார். பின்னர் அந்த பார்வையற்றவரை கையைப்பிடித்து அழைத்து வந்து பேருந்தி ஏற்றிவிட்டு செல்கிறார். இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.