ஹெட்ஃபோன் உபயோகிப்பவரா நீங்கள்...? உஷார்! வைரலாகும் எச்சரிக்கை வீடியோ

ஹெட்ஃபோன் உபயோகிப்பவரா நீங்கள்...? உஷார்! வைரலாகும் எச்சரிக்கை வீடியோ
ஹெட்ஃபோன் உபயோகிப்பவரா நீங்கள்...? உஷார்! வைரலாகும் எச்சரிக்கை வீடியோ
Published on

உங்கள் ஹெட்ஃபோனுக்குள் பெரிய சிலந்தி பூச்சி இருந்தால் என்ன ஆகும் என்பது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் வசிக்கும் ஆலி ஹர்ஸ்ட் என்பவர் ஹெட்ஃபோன் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவருக்கு காதில் ஏதோ கூசுவது போல் இருந்துள்ளது. இதை உணர்ந்த ஆலி ஹர்ஸ்ட், ஹெட்ஃபோனை கழட்டி பார்த்துள்ளார்.

அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் அதை வீடியோவாக எடுத்தும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அராக்னிட் என்ற ஒரு சிலந்தி வகை பூச்சி ஹெட்ஃபோன்களுக்கு உள்ளே இருந்தது. ஹெட்போனை வேகமாக அசைத்தும், தட்டியும் அதை வெளியேற்ற முயற்சிக்கிறார். இருப்பினும், சிலந்தி பூச்சி வெளியே வரவில்லை.

மேலும் ஹர்ஸ்ட் தான் அனுபவித்த அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். பூச்சி வெளியே வர விரும்பவில்லை. அது அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கூறிய ஹர்ஸ்ட், ஹெட்ஃபோன்களைக் கீழே வைத்து விட்டு செல்வது போன்று வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் சிலர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் ஹெட்ஃபோன்களை மீண்டும் பயன்படுத்துவதை விட புதிய சாதனத்தை வாங்குங்கள் எனத் தெரிவிக்கிறார்.

சிலந்தி அவ்வளவு ஆபத்தானது அல்ல என்றும் சிலர் சுட்டிக்காட்டினர். இதுகுறித்து, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் கூறுகையில், “பெரும்பாலும் பெரிய மற்றும் பயங்கர உருவம் இருந்த போதிலும், வேட்டைக்கார சிலந்திகள் ஆபத்தான சிலந்திகளாக கருதப்படுவதில்லை. பெரும்பாலான சிலந்திகளைப் போலவே, அவை விஷத்தையும் கொண்டிருக்கின்றன.

மேலும் அதன் ஒரு கடி சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், அவைகள் கடிக்க மிகவும் தயங்கும் ஒன்றாகும். பொதுவாக இந்த வகை சிலந்திகள் ஆக்ரோஷமாக இருப்பதை விட ஆபத்துகளில் இருந்து ஓடுவதையே விரும்பும்". என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com