எதிர்கட்சிகள் சார்பாக குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபல கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.