வேலூர்: கலர் கலராக கட்சிக் கொடிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள கேக்

வேலூர்: கலர் கலராக கட்சிக் கொடிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள கேக்
வேலூர்: கலர் கலராக கட்சிக் கொடிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள கேக்
Published on

வேலூரில் மக்களை கவர கட்சி சின்னம், கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்கை பேக்கரி ஒன்று தயாரித்து வருகிறது.

2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கட்சிக்கொடி மற்றும் தலைவர்களின் உருவம் மற்றும் சின்னம் பொறித்த இனிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாநகர் கொணவட்டத்தை சேர்ந்த தனியார் பேக்கரி கடை உரிமையாளர், தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து தனது வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளின் சின்னம் மற்றும் கொடிகள் பொறிக்கப்பட்ட கேக்குககளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளார்.

தமிழகத்தின் முன்னணி கட்சிகளான தி.மு.க, அதி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சின்னம் மற்றும் கொடி பொறிக்கப்பட்ட கேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com