“வன்னியர் இட ஒதுக்கீடு நிரந்தரமானது, நீக்க முடியாது!” - ராமதாஸ்
வன்னியர் சட்டம் நிரந்தரமானது என முதல்வர் பழனிசாமி என்னிடம் போனில் உறுதியளித்துள்ளார். தற்காலிக சட்டம் என ஒன்று இல்லை; மாறாக மற்றொரு சட்டம் கொண்டு வரும் வரை பழைய சட்டம் நீடிக்கும்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நீக்க முடியாது; அது நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.
முன்னதாக, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இதற்கு முன்பாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதே என்று சத்தியம் செய்து கூறினார்.
இந்த நிலையில் ராமதாஸ் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்