தமிழக அரசை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "மோடி தலைமையிலான அரசு இலங்கை அரசுடன் கூடி குளவி கொண்டாடி வருகிறது. மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசு. தமிழகத்தை எல்லாத்துறையிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. தமிழக மீனவர்களை மத்திய அரசு இந்திய பிரஜைகளாக நினைப்பதில்லை" என்றார்.
இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து பாதுகாப்பிற்காக கப்பல் வாங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார் அவர், "இலங்கை அரசு இந்திய தளபதிக்கு வீரசேனா விருது அளித்தது. இது அதிக நாள் நீடிக்காது இதற்கு காலம் பதில் சொல்லும், மோடி அரசுக்கு அறிக்கை தயார் செய்து கொடுப்பது மைத்ரி சிறிசேனா அரசா இந்திய வெளியுறவு துறையா" எனவும் வைகோ கேள்வி எழுப்பினார்.