உத்தரகாண்ட், கோவா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் உத்தரபிரதேச மாநில 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக நாளை 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடந்தது.
இந்த தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.