உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய செயலிகளில் ஒன்றாக இருக்கிறது வாட்ஸ் அப். மார்க் ஸக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கக் கூடிய வாட்ஸ் அப் இயக்கம் கடந்த 50 நிமிடங்களாக முடங்கியது.
இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் அன்புக்குரியவர்களுடனும், அலுவலக பணியாளர்களுடனும் தங்களது மெசேஜ்களை அனுப்பவோ பெறவோ முடியாமல் தவித்துப் போயிருக்கிறார்கள். இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ் அப் சேவை தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுகாறும் வெளியாகவில்லை.
இப்படி இருக்கையில், வாட்ஸ் அப்பில் ஏன் குரூப், பிரைவேட் உட்பட எந்த மெசேஜும் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என அறிந்துகொள்ள பெரும்பாலான பயனர்களும் ட்விட்டரில் வந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதோடு ட்விட்டரில் #whatsappdown என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகிவரும் நிலையில், வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டது குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருக்கும் பதிவுகள் பலவும் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதில், தங்களுடைய இண்டெர்நெட் கனெக்ஷனில்தான் ஏதோ பிரச்னை என நினைத்து வெகு நேரமாக மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து பார்த்து வந்ததாகவும் பதிவிட்டிருக்கிறார்கள்.