பரந்து விரிந்துள்ள சமுதாயத்தில் வாழ்க்கையை மேம்படுத்த ஒவ்வொரு நாட்களையும் எப்படி கடத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், எளிமையான ஒருநாளில் சாமானியர் ஒருவர் எதையெல்லாம் செய்யலாம் செய்யக் கூடாது என்பதன் அடிப்படைகள் பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம்.
அவ்வகையில் இதுவரை தனிநபர் ஒருவர் கற்றுக்கொள்ளாமல் அல்லது அறிந்திருக்காமல் இருக்கும் 15 முக்கியமான சமூக விதிகள் என்னென்ன என்பதை காணலாம்:
1) ஒருவரை ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் செல்ஃபோனில் அழைத்தும் பதிலளிக்கவில்லையென்றால், அவசர தேவை இல்லாத சமயத்தில் தொடர்ந்து கால் செய்துக் கொண்டிருப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் அவர்கள் உடல்நிலை சரியில்லாமலோ, தூங்கிக் கொண்டோ, வேறு ஏதேனும் முக்கியாமான வேலையிலோ இருக்கலாம்.
2) எவரிடமேனும் அவசர தேவைக்காக பணம் வாங்கியிருந்தாலும், திரும்ப கொடுத்து விடுங்கள். அவர்களா வந்து கேட்பதற்கு முன்பே கொடுத்தால் சாலச் சிறந்ததும் கூட.
3) வெளியே சாப்பிடுவதற்கு உங்களை ஒருவர் அழைத்திருக்கிறார்கள் என்பதற்காக, மெனுவில் இருக்கும் அதிக விலைகொண்ட உணவாக பார்த்து ஆர்டர் செய்யாமல் இருக்கவும். மறுமுறை நீங்கள் அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கவும் அழைத்துச் செல்லலாம்.
4) உதவியாளர்கள், க்ளீனர்ஸ், ஓட்டுநர்கள், ஓட்டல் பணியாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலையில் இருப்பவர்களிடம் கனிவாகவும், பண்பாகவும் நடந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஏதும் சேவை செய்கிறார்கள் என்றால் உங்கள் உயரதிகாளுக்கு வழங்கும் மரியாதையை அவர்களுக்கும் வழங்குங்கள்.
5) வயதில் பெரியவரோ, சிறியவரோ, பெண்ணோ, ஆணோ எவராக இருந்தாலும் நீங்கள் ஒரு கதவை திறந்து உள்ளே அல்லது வெளியே செல்லும்போது உங்கள் பின்னால் எவரேனும் வந்தால் அவர்களுக்காக கதவை திறந்துவிடுங்கள். இந்த சிறிய உதவியை செய்வதால் நீங்கள் எந்த வகையிலுமே குறைந்துவிடமாட்டீர்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.
6) உங்கள் நண்பருடனோ அல்லது உறவினருடனோ ஒன்றாக டாக்சி அல்லது பொது போக்குவரத்தில் செல்லும்போது அவர்கள் உங்களுக்காக டிக்கெட் எடுத்தால், உங்கள் பங்கை அவர்கள் கொடுத்தால் அடுத்த முறை போகும்போது அவர்களுக்கும் சேர்த்து நீங்கள் பணம் செலுத்துங்கள்.
7) வெவ்வேறு கருத்துகளை தெரிவிப்பவர்களுக்கும் மதிப்பளியுங்கள். உங்களுக்கு 6 ஆக தெரிவது எதிரே இருப்பவர்களுக்கு 9 ஆக தெரியக்கூடும்.
8) ஒருவர் உங்களிடம் பேசும போது குறுக்கிட்டு பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் பேசி முடித்தப் பிறகு நீங்கள் உங்கள் பேச்சை தொடருங்கள்.
9) எவரையாவது கிண்டல் செய்யும் போது அவர்கள் வருத்தப்படுவதோ அல்லது சங்கடப்படுவது போன்று தோன்றினால் அக்கணமே அப்படி செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் அவ்வாறு ஈடுபடுவதை தவிர்த்திடுங்கள்.
10) உங்களுக்கு யாராவது எந்த உதவியாவது செய்தால் அவர்கள் நன்றி தெரிவிப்பதை பழக்கமாக கொள்ளுங்கள்.
11) நீங்கள் கொடுக்கும் உத்தரவாதத்தை, வாக்குறுதியை மீறி செயல்படாதீர்கள். அந்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும் என தெரியாவிட்டால் வார்த்தையை விட்டுவிடாதீர்கள்.
12) எவரேனும் உங்களிடம் அவர்களை பற்றிய ரகசியத்தை கூறினால், அந்த நபர் உங்களுக்கு எதிரியாக மாறினால் கூட எவரிடமும் கூறாதீர்கள்.
13) யாரேனும் தனது செல்ஃபோனில் உள்ள ஃபோட்டோ ஒன்றை காண்பித்தால் அதனை பார்த்தப்பிறகு வலமோ, இடமோ ஸ்வைப் செய்யாதீர்கள். அதில் என்ன இருக்கும் என்று நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
14) குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் ஒரு இடத்தில் இருக்க முடியாது என தெரிந்தும் நேரத்தை நிர்ணயித்து கூறாதீர்கள். அது ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது. நேர நிர்வாகத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் காலம்தான் காசு. போனால் திரும்ப வராது.
15) உங்களுடைய பணம் உள்ளிட்ட செல்வங்களை பற்றி ஏழைகள் மத்தியில் பேசாதீர்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் முன்பு உங்களுடைய குழந்தைகளை பற்றி பேசாதீர்கள்.