USB கேபிள் கொண்டு தனது பிறப்புறுப்பின் உட்புறத்தை அளவிட முயற்சித்த போது அந்த கேபிள் 15 வயது சிறுவனின் ஆணுறுப்பின் உள்ளேயே சிக்கிய அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. இந்த விநோத சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்திருந்தாலும் இந்த கேஸ் தொடர்பான விவரத்தை சயின்ஸ் டைரக்ட் அறிக்கையில் சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் எழுதியிருக்கிறார்.
அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது அந்தரங்க உறுப்பின் உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட முற்பட்டிருக்கிறார். ஆனால் அந்த யு.எஸ்.பி. கேபிளோ சிறுவனின் உறுப்பிற்குள்ளேயே முடிச்சு போட்டபடி சிக்கியிருக்கிறது.
இதனால் சிறுவனின் சிறுநீரில் ரத்தமும் வரத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மருத்துவமனையின் அறையில் இருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்.
அதன்படி ரூலரை கொண்டு அளவிடாமல் வேண்டுமென்றே யு.எஸ்.பி. கேபிளை கொண்டு உள்ளே செலுத்தியதாகவும் மருத்துவர்களிடம் டீனேஜ் பையன் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு சிறுவனை முழுவதுமாக பரிசோதித்ததில் அவர் உடல் ரீதியாக எந்த பிரச்னையையும் கொண்டிருக்கவில்லை என்றும், மன ரீதியாகவும் கோளாறு இருக்கவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறார்.
இதனையடுத்து, USB கேபிளின் இருபுற போர்ட்களும் சிறுவனின் சிறுநீர்க்குழாய் பகுதியில் நீண்டுக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதே சமயத்தில் முடிச்சு போடப்பட்ட கம்பியின் நடுப்பகுதியில் சிறுநீர்க்குழாய்க்குள் இருந்திருக்கிறது. ஏகப்பட்ட முடிச்சுகள் இருந்ததால் உலோக கம்பியை கொண்டு கேபிளை அகற்றுவது கடினமான வேலையாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆகவே உள்ளே சிக்கியிருக்கும் கேபிளை அணுக வடிகுழாய்கள் பொருத்தப்பட்டு பிறப்புறுப்புக்கும், ஆசனவாய்க்கும் இடையே செருகி, வெளிப்புற சிறுநீர்க்குழாய் வழியாக வெற்றிகரமாக வெளியே இழுக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 15 நாட்களுக்கு பிறகு பொருத்தப்பட்ட வடிகுழாயும் அகற்றப்பட்டு இருக்கிறது.” என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, சிறுநீர்க்குழாயில் வெளியில் இருந்து எதேனும் பொருட்களை செருகுவதால் சிறுநீர் கழிக்கும் போது வலிப்பது, ரத்தம் வருவது அல்லது வலிமிகுந்த விறைப்புத்தன்மை ஏற்படும் என இந்த ஆய்வின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.