ஊரடங்கால் வேலையிழந்த ஐ.டி.பெண் ஊழியர் உட்பட இருவர் தற்கொலை... ஆவடியில் சோகம்

ஊரடங்கால் வேலையிழந்த ஐ.டி.பெண் ஊழியர் உட்பட இருவர் தற்கொலை... ஆவடியில் சோகம்

ஊரடங்கால் வேலையிழந்த ஐ.டி.பெண் ஊழியர் உட்பட இருவர் தற்கொலை... ஆவடியில் சோகம்
Published on

ஆவடி அருகே கொரோனா ஊரடங்கில் வேலை இழந்த ஐ.டி.பெண் ஊழியர் உட்பட இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், தேவராஜபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் காஞ்சனா (24) அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதமாக காஞ்சனா வேலை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த காஞ்சனா வீட்டில் கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


இதேபோல் பட்டாபிராம், சத்திரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (29). பெயிண்டர் வேலை செய்து வரும் இவரும் கடந்த 5,6 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மனமுடைந்த பால்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த இரு சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாபிராமில் ஐ.டி.பெண் ஊழியர் உட்பட அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com