வேலூரில் பட்டப் பகலில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள்... அச்சத்தில் மக்கள்...!

வேலூரில் பட்டப் பகலில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள்... அச்சத்தில் மக்கள்...!
வேலூரில் பட்டப் பகலில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள்... அச்சத்தில் மக்கள்...!
Published on

முன்விரோதம் காரணமாக வேலூரில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வேலூர் ஆர்.எஸ்.நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சாலமன் (38). இவரை நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை செய்து, வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வீசிச் சென்றனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறையினர் கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் சாலமனை கொலை செய்ததாக ஆர்.எஸ்.நகரை சேர்ந்த விஜய் (26), ப்ரவின்குமார் (25), பிரபாகரன் (25), ஐயப்பன் (26), விக்னேஷ் (26), மணிகண்டன் (25) ஆகிய ஆறுபேரை கைதுசெய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து கைதானர்கள் கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டு விஜயின் தந்தை முனி என்பவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை சாலமன் கொலை செய்துள்ளார். 

 அதற்கு பழி வாங்குவதற்காக காத்திருந்த விஜய் நேரம் பார்த்து தனது நண்பர்களை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு சாலமன் சாலையில் செல்லும் போது அவரை கடத்தி ஆட்டோவில் வைத்தே குத்தி கொலை செய்துவிட்டு மாநகராட்சி அலுவலகம் அருகே வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதேபோல் வேலூர் அம்மனாங்கோட்டை பகுதியை சேர்ந்த கோபி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி ரமணியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு சென்று பெங்களூருவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரமணியின் உறவினர் இறப்புக்கு கோபி மற்றும் ரமணி ஆகியோர் சொந்த ஊரான வேலூர் அம்மனாங்குட்டைக்கு வந்துள்ளனர். 

இதை அறிந்து ஆத்திரமடைந்த ரமணியின் முன்னாள் கணவர் சரவணன் கோபியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி இன்று உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் தலைமறைவாக உள்ள சரவணனை தேடிவருகின்றனர்.வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொலை சம்பவங்களால் வேலூர் மாநகர மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com