கட்சியிலிருந்து நீக்க டிடிவிக்கு அதிகாரம் கிடையாது: வைத்திலிங்கம்

கட்சியிலிருந்து நீக்க டிடிவிக்கு அதிகாரம் கிடையாது: வைத்திலிங்கம்
கட்சியிலிருந்து நீக்க டிடிவிக்கு அதிகாரம் கிடையாது: வைத்திலிங்கம்
Published on

கட்சியிலிருந்து தன்னை நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன் என்று வைத்திலிங்கம் புதியதலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், 5 வருடம் முடிவதற்குள் தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டாலும், தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவித்துவிட்டோம். சசிகலா சிறையில் இருப்பதால் அவர் இயங்க முடியாது. அப்படி செயல்பட்டால் அது சட்டப்படி குற்றம்” என்று கூறினார்.

நேற்று நடைபெற்ற இணைப்பு விழாவின் போது சசிகலாவை நீக்க வேண்டும் என நீங்கள் கூறியதுதான் டிடிவி தினகரனின் இந்த அறிவிப்புக்கு காரணமா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்று வைத்திலிங்கம் பதிலளித்தார்.

மேலும், “மெஜாரிட்டியை எங்களால் நிரூபிக்க முடியும். பொதுக்குழு கூடி சசிகலாவையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும். இழந்த சின்னத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். 19 பேர் விலகிச் சென்றது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 99.9 சதவிகிதம் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். ஓரிரு நாட்களில் டிடிவி பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் மனம் மாறி இங்கு வர வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com