காவல்துறை அதிமுகவினரைப் போல செயல்படக்கூடாது: டிடிவி தினகரன்

காவல்துறை அதிமுகவினரைப் போல செயல்படக்கூடாது: டிடிவி தினகரன்
காவல்துறை அதிமுகவினரைப் போல செயல்படக்கூடாது:  டிடிவி தினகரன்
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினரைப் போல காவல்துறை செயல்படக்கூடாது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் ராஜேஷ் லக்கானியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள காவலர்கள் தீவிரவாதிகளை பிடிப்பது போல எனது ஆதரவாளர்களை பிடிக்கின்றனர். குறிப்பாக நான் சென்று பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் குறுக்கீடு செய்கின்றனர். இதெல்லாம் ஆளும் கட்சியினர் விரக்தியில் செய்வதாகும். காவல்துறை அவர்களுக்கு ஏவல்துறையாக செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் நீதிமன்றத்திற்கு சென்று பாடம் புகட்டுவோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆதரவாளர்களிடம் காவல்துறையினர் தவறுதலாக நடந்துகொண்டால் அதற்கு காவல் ஆணையரே பொறுப்பு, பின்னர் அவரை தான் நாங்கள் நீதிமன்றத்திற்கு அழைப்போம். அதேபோன்று தேர்தல் ஆணையத்தினரும், அதிகாரிகளும் இரும்புக்கடை அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலமச்சர் பழனிசாமி என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்ல. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் நாங்கள் பயப்படமாட்டோம். தற்போதுள்ள காவல்துறை ஆணையர் இதற்கு முன் இருந்த துரை, காளிமுத்து, ஜாஃபர் சேட்டு போன்ற ஆணையர்களுக்கு என்ன நிலைமை ஏற்பட்டது என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும். இதற்கு மேலும் காவல்துறையினர் மதுசூதனனுக்கு உறவினர்கள் போலவும், தற்போதுள்ள அதிமுக கட்சியினரைப் போலவும் செயல்பட்டால் நாங்கள் உடனே நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவோம். இந்த புகார்கள் அனைத்தையும் தெரிவிக்கவே இன்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்தேன். பாஜக ஆர்.கே நகரில் டெபாசிட் வாங்குமா என்று தெரியவில்லை. அதனால் தான் அவர்கள் தேர்தலை நிறுத்த நினைக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com