டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டிடிவி தினகரன் மார்ச் 15 ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்தார்.மேலும் தனது அமைப்புக்கு கட்சி அங்கீகாரம் வழங்குமாரு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். எனவே, இது குறித்த விசாரணமை திங்கள்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததோடு மட்டுமல்லாமல்,மதியம் 3.30 மணிக்கு ஆஜராகுமாறு டிடிவி தினகரன்னு தேர்தல் ஆணையம் உத்தரவவிட்டுள்ளது.
புதிய கட்சி, பெயர், கொடி ஆகிவற்றிற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக விசாரணை, டிடிவி தினகரனுக்கு பதில் அவரது வழக்கறிஞர் ராஜசெந்தூர பாண்டியன் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.