விசித்திரமான விநோதமான செயல்கள் தொடர்பான வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காத இடமாக மாறிவிட்டது சமூக வலைதளங்கள்.
அந்த வகையில் பார்க்கிங்கில் இருந்த டூ வீலரில் உட்கார்ந்திருந்த டிரைவரோடு போலீஸ் வண்டியில் தூக்கிச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரிதளவில் வைரலாகியிருக்கிறது.
அதன்படி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சதார் பஜார் பகுதியில்தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி வரும் போக்குவரத்து போலீசின் வாகனம் ஒன்று, டூ வீலரில் அமர்ந்திருந்த டிரைவரோடு சேர்த்து தூக்கியிருக்கிறது.
அந்த நபரும் எந்த சலனமும் இல்லாமல் தனது டூ வீலரை எடுத்துச் செல்ல விடாமல் டிராஃபிக் போலீஸ் வண்டியில் தொங்கியபடி இருந்திருக்கிறார்.
இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபர், தன்னையும் தனது ஸ்கூட்டரையும் மீண்டும் தரையில் வைக்குமாறு இழுத்துச் செல்லும் டிராஃபிக் போலீஸ் வாகனத்தின் டிரைவரிடம் கேட்கிறார். இது தொடர்பான வீடியோ கிட்டத்தட்ட 20 லட்சம் பேரால் பார்கப்பட்டிருக்கிறது.
“தன் வாழ்க்கையை விட அந்த நபர் தன்னுடைய டூ வீலரை அதிகம் நேசிப்பவராக இருக்கும்” என்றும், “வண்டியில் உட்கார்ந்திருக்கும் போதே அவரை வாகனத்தோடு தூக்குவது சட்டப்படி சரியான முறையல்ல” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.